ஜோகூர், 01 அக்டோபர் 2025 : ஜொகூர் விளையாட்டு ரசிகர்களின் ஆவலை மேலும் உயர்த்தும் வகையில், சுல்தான் ஜொகூர் ஹாக்கி கோப்பையின் 13வது பதிப்புக்கு (2025) இன்று sponsors காசோலை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உலகின் சிறந்த இளைய ஹாக்கி வீரர்களை உருவாக்கும் தளமாக பெயர் பெற்ற இந்த பிரபலமான போட்டி, ஜொகூரின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்தும் முக்கிய மேடையாக கருதப்படுகிறது.
விழாவில் மாண்புமிகு துவான் முக்த் ஹைரி பின் மாட் ஷா (ஜொகூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு, தொழில்முனைவு வளர்ச்சி மற்றும் கூட்டுறவு குழு தலைவர்), மாண்புமிகு தத்தோ’ ஓன் பின் ஜப்பார் @ ஜாஃபர் (ஜொகூர் மாநில துணைச் செயலாளர் – விளையாட்டு, இளைஞர் மற்றும் தன்னார்வலர்), டிஎஸ். முக்த் எக்மாலுடின் இஷாக் (ஜொகூர் மாநில விளையாட்டு கவுன்சில் இயக்குநர்) மற்றும் என்சிக் முகமது நஸ்ருல் பின் அப்து ரஹீம் (டூரிசம் ஜொகூர் இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஹாக்கி கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட பல வலுவான அணிகளை ஈர்த்து, ரசிகர்களை பரபரப்பான ஆட்டங்களால் கவர்ந்திழுக்கிறது.
இந்த ஆண்டும் ஜொகூர் தரப்பிலான வலுவான ஆதரவு மற்றும் sponsors பங்களிப்புகள், போட்டியின் மரியாதையை மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஹாக்கி விருந்துவிழா, ஜொகூரில் விளையாட்டு சூழலை உற்சாகமூட்டும் என நம்பப்படுகிறது.







