கோலாலம்பூர், 25 செப்டம்பர் 2025 : தேசிய வகை தமிழ்ப்பள்ளி சிம்பாங் லிமா ஸ்ரீ ஆண்டாளஸ், ஆண்டு 6 பாரதியார் வகுப்பு மாணவர்கள் தேவவர்ஷன் ஏழுமலை மற்றும் தேவதர்ஷன் ஏழுமலை ஆகியோர் மலேசியாவிற்கும் தங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.காத்தமாண்டு, நேபாளத்தில் 05 செப்டம்பர் முதல் 08 செப்டம்பர் 2025 வரை நடைபெற்ற Global STEM for SDG 2025 சர்வதேச அறிவியல் புத்தாக்கப் போட்டியில், சூரிய ஒளி பலகையுடன் பசுமை மழைநீர் சுத்திகரிப்பு (Green Rainwater Purifier with Solar Panel ) எனும் புத்தாக்கம் உருவாக்கி உலக சாதனை பெற்றுள்ளனர்.
இந்தச் சர்வதேச அறிவியல் புத்தாக்கப் போட்டியில் போட்டி TMP Schools / TMP Little Scientists Research Academy மற்றும் Benchmarks International ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேசிய அரசாங்கம் மற்றும் நேபாள அரசாங்க அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்றது.மொத்தம் 15 நாடுகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மலேசியாவிலிருந்து 47 மாணவர்கள், 17 அணிகள் கலந்து கொண்டனர். அதில் 13 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர்.
தேசிய வகை தமிழ்ப்பள்ளி சிம்பாங் லிமா மாணவர்கள் பெற்ற விருதுகள்:
- தங்கப் பதக்கம் (Gold Medal)
- Special Award for Caring – அனைத்து பங்கேற்பாளர்களிலும் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற விருது
- Champion Award – Malaysia Youth Scientists Organisation (MYSO) வழங்கிய சாம்பியன் விருது பெற்றுள்ளனர் .
15 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற இந்தச் சர்வதேச போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வகை சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பெற்ற வெற்றி, அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றாகும்.மேலும் போட்டி நிறைவுவிழாவில், மாணவர்கள் முன்னிலையில் நேபாள அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு ஐன் பஹதூர் ஷாஹி தாக்குரி, மலேசிய தூதரகம் – நேபாளத்தில் உள்ள என். ஃபிர்தவுஸ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய வகை சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மூடுபேச்சு வழங்கும் பெருமையும் கிடைத்தது.












