கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த MH17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில் 28 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 பேர் பயணிகள், 13 பேர் விமானப் பணியாளர்கள் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட 28 சடலங்களில் 14 பேர் முஸ்லிம்கள், 14 முஸ்லிம் அல்லாதவர்களுடையது என சடலங்களை தாயகத்திற்குக் கொண்டு வருவதற்கான தயார் நிலை குறித்து ஊடகத்துறையினருக்கு நடத்தப்பட்ட சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ இஷாமுடின் துன் உசேன் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசிய வரலாற்றிலேயே முதன்முறையாக மலேசிய இராணுவம் சாதாரண பொதுமக்களின் மரணத்திற்கு முழு மரியாதை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.