சிரியா மீது பறக்க அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை

சிரியா மீது பறக்க அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை

american-airlines

விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ராணுவ விமானங்கள உட்பட அனைத்து பயணிகள் விமானங்களும் சிரியா மீது பறந்து செல்வதற்கு அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு(எப்ஏஏ) நேற்று தடை விதித்துள்ளது. 

சிரியாவில் தற்போது நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரின் விளைவாக இந்த வான்வெளியில் பறக்கும் அனுமதியைப் பெற ஆபரேட்டர்களும் விருப்பம் காட்டுவதில்லை. மேலும் இந்த நிலைமை ஒரு தீவிர அச்சுறுத்தலை எப்போதும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் எப்ஏஏ சிரியா மீது பறப்பது குறித்த எச்சரிக்கை ஆலோசனைகளை வெளியிட்டிருந்தது.  கடந்த 8ஆம் தேதி முதல் ஈராக் மீதும் அமெரிக்க விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுவும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. 

ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளுக்கு வருவதற்கு இந்த வான்வழிப் பாதைகள் பயன்படுகின்றன. ஆனால் சிரியாவில் போரிட்டுவரும் தீவிரவாதிகள் பயணிகள் விமானங்களை சேதமடையச் செய்யக்கூடிய திறமை வாய்ந்த விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. 

ஏற்கனவே சிரியா ராணுவ விமானத்தை இவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் சிரியாவின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக உள்ள காரணத்தினாலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எப்ஏஏவின் புதிய அறிக்கை குறிப்பிடுகின்றது.