என் தமிழ்

இரண்டாவது தலைமுறை கடற்கரை போர் கப்பலான Littoral Combat Ship (LCS)-இன் பெயரிடும் மற்றும் தொடக்க விழா

பேராக், 03 ஜூலை 2025 : சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராசிகின் ஆகியோர், மலேசியா கடற்படைக்காக (TLDM) தயாரிக்கப்பட்ட இரண்டாவது தலைமுறை கடற்கரை போர் கப்பலான Littoral Combat Ship (LCS)-இன் பெயரிடும் மற்றும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

இச்சிறப்பு விழா, லூமுட் கடற்படை கப்பல்துறை பணியகத்தில் (LUMUT Naval Shipyard – LUNAS), TLDM தளத்தில் நடைபெற்றது.

தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராசிகின், கப்பலின் “Royal Sponsor” என்ற வகையில், இரண்டாவது LCS கப்பலுக்கு “கப்பல் திராஜா (KD) ராஜா முதா நாலா” எனப் பெயரிடும் கௌரவத்தை வகித்தார். இந்த நிகழ்வை, சிலாங்கூர் ஸுல்தான் தம்ஸ் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா பெருமகனும் பங்கேற்று காணமளித்தார்.

“ராஜா முடா நாலா” என்ற பெயர், சிலாங்கூர் அரசரசத்தின் வீரவணக்கத்தையும், திருநாட்டின் முழுமையான பாதுகாப்பிற்காக போராடிய அந்த வரலாற்று வீரரின் உறுதியும், தைரியமும், வீரத்தையும் பிரதிபலிக்கிறது. இது, தற்போதைய கடல்படையின் பாதுகாப்பு முயற்சிகளில், அரச மரபில் நிலைத்திருக்கும் வீரத்தைக் காட்டும் ஒரு தொடர்ச்சியும் ஆகும்.

இந்த LCS வகை கப்பல்கள், மலேசிய நிறுவனமான Lumut Naval Shipyard Sdn Bhd மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட மலேசியாவின் முதல் frigate வகை கப்பல்களாக இருக்கும் வகையில், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் முக்கியத்துவம் கொண்டவை.

இந்த வெற்றிகரமான பயணம், மலேசியாவின் உள்ளூர் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான திறனை உலக தரத்தில் முன்னெடுத்து நிறுத்தும் ஒரு அடையாளமாகும்.

இரண்டாவது LCS கப்பலுக்கு பெயரிடும் இவ்விழா, பாதுகாப்பு அமைச்சின் (MINDEF) தேசிய திட்டம் ஒன்றின் மைல்கல்லாகவும், மலேசியா கடற்படையின் (TLDM) உயர்நிலையான ராணுவ உள்கட்டமைப்பைப் பராமரிக்க, தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட, பல்வேறு கடல் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான ஒரு முக்கிய முனைப்பாகவும் இருக்கிறது.

இந்நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள்:

  • நிதித்துறை இரண்டாம் அமைச்சர் YB டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான்
  • பாதுகாப்பு துணை அமைச்சர் YB அட்லி பின் சாகாரி
  • மலேசியா இராணுவ தளபதி ஜெனரல் தான் ஸ்ரீ ஹாஜி மொகட் நிசாம் ஜாப்பர்
  • மூத்த இராணுவ அலுவலர்கள், MINDEF மற்றும் ATMமலேசிய இராணுவ படையின் உயர் அதிகாரிகள்.
Scroll to Top