புக்கிட் ஜாலில், 01 ஜூலை 2025 : புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப் தனது 21ஆவது ஆண்டு விழாவையும், புதிய நிர்வாக குழுவின் பொறுப்பேற்பு நிகழ்வையும் நேற்று இரவு விமர்சையாகக் கொண்டாடியது. பல தரப்பினரின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், கடந்த ஆண்டு கிளப்பை திறம்பட வழிநடத்திய தலைவி திருமதி சரண்யா அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது.
படிப்படியாக வளர்ந்து வரும் புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப், பல சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தலைவி சரண்யா தலைமையில் கடந்த ஆண்டில் பல முக்கியமான திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, 22வது தலைவராக திரு சுப்பிரா அவர்கள் பதவியேற்றனர். புதிய தலைவருடன் இணைந்து செயல்பட உள்ள நிர்வாக குழுவினரும் அதேநேரம் பதவியேற்றனர்.
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில், “இந்த புதிய ஆண்டில் மேலும் பல அர்த்தமுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும். சமூகத்தில் தொலைநோக்கு தாக்கம் ஏற்படுத்தும் பணிகளை தொடர்வதே எங்கள் இலக்கு” என தலைவர் சுப்பிரா உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் ரோட்டரி உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவை ஒளிமயமாக்கினார்கள்.
“ஒன்றிணைந்து நாம் வளர்வோம், ஒன்றிணைந்து நாம் சேவை செய்வோம், ஒன்றிணைந்து நாம் ஜொலிப்போம்” என்ற ஆற்றல் மிக்க முழக்கம் முழு நிகழ்வும் ஒலித்தது.





