பகாங் மாநிலத்தில் எலி சிறுநீர் அல்லது, லெப்தோஸ்பிரோசிஸ் கிருமி தாக்கிய சம்பவங்கள் 2011 முதல் 2013 வரை அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 277 லெப்தோஸ்பிரோசிஸ் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு 163 2011-ஆம் ஆண்டு 135 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டதாக சட்டமன்றக் கூட்டத்தில் சுகாதாரம், மனிதவளம் மற்றும் பகாங் சிறப்புக்குழு தலைவர் டத்தோ நோரோல் அசாலி சுலைமான் தெரிவித்தார்.
மாநிலத்தில் குவாந்தான், ஜெராண்டுட், லிப்பிஸ், பெக்கான், மாரான், மற்றும் தெமர்லோ ஆகிய மாவட்டங்களில் தான் அதிகமான லெப்தோஸ்பிரோசிஸ் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.