புத்ரஜெயா, 26 ஜூன் 2025 : கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறவிருக்கும் 58வது ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் தொடர்புடைய கூட்டங்களின் போது எந்த சாலை மூடல்களும் செயல்படுத்தப்படாது.
இன்று நடைபெற்ற தகவல் தொடர்பு அமைச்சரின் வாராந்திர ஊடக மாநாட்டில் மதானி அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ பாஹ்மி ஃபட்சில் இதை உறுதிப்படுத்தினார்.
“இந்த நிகழ்விற்காக சாலை மூடல்கள் இருக்காது.
“இருப்பினும், அக்டோபர் மாத இறுதியில் திட்டமிடப்பட்ட 47வது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு, கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.





