என் தமிழ்

RM18,000 கட்டணத் தவணைச் சிக்கல்… ஆனால் இன்று ‘மருத்துவர் சௌந்தர்யா’ – கனவை நனவாக்கிய அமைச்சர் ஸ்டீவன் சிம்!

ஜார்ஜ்டவுன், 23 ஜூன் 2025 : ஒரு லாரி டிரைவர் மற்றும் ரப்பர் தாப்பராக பணியாற்றும் பெற்றோரின் மகளான சௌந்தர்யா, பலருக்கும் சாத்தியமற்ற ஒன்றாகத் தெரிந்த கனவை இன்று நனவாக்கியுள்ளார். RM18,000 கட்டணத் தவணை செலுத்த முடியாததால் ஒரு கட்டத்தில் கல்வியை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட இவர், இன்று “மருத்துவர் சௌந்தர்யா” என்கிற பெருமைமிகு அடையாளத்துடன் பட்டம் பெற்றுள்ளார்.

சௌந்தர்யாவின் வாழ்க்கையை மாற்றியதிருப்பிய தருணம், அவர் மலேசியா மனிதவள மற்றும் சமூக நல அமைச்சராக உள்ள YB ஸ்டீவன் சிம் சீ கியோங் அவர்களுக்கு எழுதிய நம்பிக்கையுடன் கூடிய ஒரு கடிதமே. அதனை பெற்ற உடனேயே அமைச்சர் தயங்காமல் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்தார். பின்னர், அவளது மருத்துவக் கல்விக்கான நிலுவையில் உள்ள கட்டணத் தொகையை அரசின் உதவியுடன் சமாளிக்க ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து 5 ஆண்டுகள் துன்பத்தையும் தடைகளையும் தாண்டி, சௌந்தர்யா தனது கல்வியை முடித்துள்ளார். அதனுடன், மூன்று முறை Anugerah Dekan (டீனின் சிறந்த மாணவ விருது) வென்றும் சாதனை படைத்துள்ளார்.

இதன் நன்றியறிகையாக, அவரது பட்டமளிப்பு விழாவிற்கு YB ஸ்டீவன் சிம் அவர்களே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

“இது வெறும் பட்டமளிப்பு விழா அல்ல, ஒரு கனவின் நிறைவேறல்” என விழாவில் கலந்து கொண்ட ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சௌந்தர்யா தனது சமூக ஊடகப் பதிவில், “என் வாழ்க்கையின் இருட்டான தருணத்தில் ஒளியாக வந்தவர் YB ஸ்டீவன் சிம். நன்றி என்பது போதாது” எனக் கூறியுள்ளார்.

உலகம் உங்கள் மாதிரியான இருதயமுள்ள மருத்துவர்களை தேடுகிறது– இதுவே இந்த நிகழ்வின் முக்கியமான செய்தியாகவும், ஏனைய மாணவர்களுக்கு ஊக்கமாகவும் அமைந்துள்ளது.

மலேசியா மடானி முன்னெடுப்பின் ஓர் உண்மையான எடுத்துக்காட்டு!

Scroll to Top