என் தமிழ்

கெடா மாநில பள்ளிகளுக்கு இடையிலான கபாடி போட்டியில் கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளி வெற்றி.

அலோர் ஸ்டார், 18 ஜூன் 2025 : கெடா மாநிலபள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கபாடி போட்டியில் கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளி முதல் இடத்தை கைப்பற்றி முத்திரை பதித்தது.

இப்போட்டி ஜூன் 18-ஆம் தேதி, அலோர்ஸ்டாரில் உள்ள விலேஜ் மால் வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உடற்கல்வி திறனையும், குழு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த போட்டி நடத்தப்பட்டது.

இரண்டாம் நிலையை ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வென்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.

மாணவர்களின் உற்சாகம், ஒற்றுமை, முயற்சி மற்றும் விளையாட்டு ஒழுக்கம் பாராட்டுக்குரியது என ஆசிரியர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

விளையாட்டு மற்றும் கல்வியில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி தொடர வேண்டும் என்பதே அனைவரின் மனம்.

Scroll to Top