என் தமிழ்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டி : ரொக்கப் பரிசுகள் வெ 2,700 – ஜூன் 22 ல் நடைபெறும்

கோலாலம்பூர், 18 ஜூன் 2025 : நாடுதழுவிய நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, மத்திய, தெற்கு மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு தலா 20 மாணவர்கள் வீதம் 60 மாணவர்கள் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மண்டலமான கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த 20 சிறந்த கட்டுரையாளர்களுக்கான நேரடிப் போட்டி வரும் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கோலாலம்பூர் பிரிக்பிள்ஸ் விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் நடைபெறும். அப்போது கொடுக்கப்படும் தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுதுவர்.

வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரி. ம. 1,000.00, இரண்டாம் பரிசு ரி. ம. 700.00, மூன்றாம் பரிசு ரி. ம. 500.00. அதோடு, 5 ஆறுதல் பரிசாக ரி. ம. 100.00 வீதம் வழங்கப்படும். முதல் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும். நேரடியாக போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு டீ- சட்டைகளும் சான்றிதழும் வழங்கப்படும். அதோடு நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து செலவுத் தொகை, உணவு ஆகியவையும் கொடுக்கப்படும். ம.இ. காவின் தேசிய துணைத் தலைவர் இலக்கியச் செல்வர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்குவார்.

தேர்வுப் பெற்றவர்கள் பின்வருமாறு:

மத்திய மண்டலம்

1. மே. சிவப்பிரியா , பத்து ஆராங் தமிழப் பள்ளி

2.வர்ஷிக்கா ஆனந்தன், வெஸ்ட் கன்ட்ரி காஜாங்

3.ரூ. ரிஷோனா ஏஞ்சல் காஜாங் தமிழ்ப்பள்ளி

4.ம. அகிலேஷ், தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்

5.டேஷ்வரன் வாசுதேவன், காஜாங் தமிழ்ப்பள்ளி

6.விலோஷனா தங்கமணி, தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்

7. வ. ரிச்சினா , ஜென்ஜாரோம்

8. மு. சுவாபஸ்ரீ , தாமான் பெர்மத்தா, டெங்கில்

9. மோ. டர்வின், ஜென்ஜாரோம்

10. மு. லக்‌ஷனா, ஜென்ஜாரோம்

11.சி. ஆனந்தராஜ், ஜென்ஜாரோம்

12.வாக்க்ஷனா, செர்டாங்

13. பூரணி ஆறுமுகம், தாமான் பெர்மத்தா, டெங்கில்

14. சி. மகேந்திரா, தாமான் பெர்மத்தா, டெங்கில்

15. வி. சரண்ராஜ், தாமான் பெர்மத்தா, டெங்கில்

16.பு. பெவிஷனா, தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்

17. ம. லோகன் தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்

18. கு. யுகானந்தன், செர்டாங்

19. தீபான்யா ராஜன் ,தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்

20. விவேஷஸ்ரீ , செர்டாங்

மேல் விபரம் பெற வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் (012-6589252) அல்லது அறங்காவலர் திரு. பரமசிவம் (011-35231429) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம் என்று தமது பத்திரிகைச் செய்தியில் வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் குறிப்பிட்டார். மின்னஞ்சல் முகவரி: tamilschoolCAF@gmail.com.

Scroll to Top