என் தமிழ்

பாலி விமானங்கள் ரத்து – லெவோடோபி எரிமலை வெடிப்பு காரணம்

பாலி[இந்தோனேசியா], 18 ஜூன் 2025 : இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பாலிக்கு வரும் மற்றும் புறப்படும் குறைந்தது 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கிழக்கு ஃப்ளோரஸ் தீவில் அமைந்துள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை (Gunung Lewotobi Laki-Laki) செவ்வாய்க்கிழமை மாலை வெடித்து, 11 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல்களை வானில் வீசியது.

இந்த தீவிர வெடிப்பு கிழக்கு ஃப்ளோரஸ் மாவட்டத்தை அச்சுறுத்த, அதன் அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் — குறிப்பாக குழந்தைகள், மூதியோர்கள் மற்றும் உடல் நலக்குறைவானோர் ,அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டனர்.

இது குறித்து பேரழிவுப் மேலாண்மை மற்றும் விமானப்பயண அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, சாம்பல் மேகம் விமான போக்குவரத்துக்கு பெரும் தடையாக விளங்கியதால், பல விமானங்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என அறியப்பட்டது.

இந்தோனேசியா உலகின் மிகச் சொர்க்கப் பகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், அது “Ring of Fire” எனப்படும் பசிபிக் தீவட்டத்தில் அமைந்திருப்பதால், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு அடிக்கடி உள்ளாகிறது.

விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலையிலும், அதிகாரிகள் நிலைமையை கவனித்து வருகின்றனர். மேலும் எரிமலை வெடிப்புகள் தொடரும் சந்தர்ப்பத்தில், மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top