என் தமிழ்

வரிவிதிப்பு திட்டம் பொறுப்பற்றது, மக்கள் சுமையை மேலும் அதிகரிக்கிறது – DHPP

கோலாலம்பூர், 18/06/ 2025 :
சேவை மற்றும் விற்பனை வரி (SST) மீண்டும் அமல்படுத்தப்படுவதும், அதன் வரம்பு உணவுப் பொருட்கள், பானங்கள், டிஜிட்டல் மற்றும் தளவாட சேவைகள் வரை விரிவாக்கப்படுவதும், மக்கள் வாழ்க்கையை மேலும் சிரமமாக்கும் ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் (DHPP) கண்டனம் தெரிவித்துள்ளது.

“விலைகள் குறையாத நிலையிலும், டீசல் மானியத் திருத்தம் சிறு வியாபாரங்கள் மற்றும் போக்குவரத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் SST வரியை மேலும் விரிவுபடுத்துவது, மக்களின் பயன்படுத்தக்கூடிய வருமானத்தை அழிக்கும்”,என்றார் DHPP மத்தியத் தலைவர் திரு.பாலசுப்பிரமணியம்

அவரின் கூற்றுப்படி, பணவீக்கம் தொடர்ந்து பெருகும் சூழ்நிலையிலும், அரசு ‘பொருளாதாரம் சீராகிறது’ என கூறுவது நியாயமற்றதாகும். SST வரி B40 மட்டுமன்றி M40 வர்க்கத்தையும் “நகர்மாநகரத் தாழ்த்தப்பட்ட வகுப்பாக” தள்ளும் அபாயத்தில் உள்ளது.

“அரசாங்கம் வரிவிதிப்பில் வருவாய் தேடுவதற்கு பதிலாக, மிச்சப்படுதல், சீரற்ற அரசியல் நியமனங்கள், மற்றும் நிதி சிதைவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

DHPP கீழ்கண்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது:

  1. SST வரி விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  2. மக்களுக்கு அவசியமான மானியங்களை மீண்டும் வழங்க வேண்டும்.
  3. சமச்சீர் செல்வ விநியோகம் மற்றும் சமூக நீதியை மையமாகக் கொண்ட பொருளாதார மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்த வேண்டும்.

“இனம், மதம், சமூகம் என எதனையும் பார்க்காமல், மக்களுடன் உறுதியாக நிற்கும் DHPP, அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது,”எனத் தலைவர் தெரிவித்தார்.

PAS FOR ALL
துவான் பாலசுப்பிரமணியம் நாசியப்பன்
மத்தியத் தலைவர், DHPP
18 ஜூன் 2025

Scroll to Top