புத்ரா ஜெயா,18 ஜூன் 2025 : மலேசியர்கள் ஈரானில் சந்தித்து வரும் பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அவர்கள் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 20க்குள் தாயகம் திரும்புவார்கள் என தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று தெரிவித்தார்.
மேலும் அவர் ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மலேசியர்கள் மீட்கப்படுவதற்கான ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“அந்நாட்டில் உள்ள அனைத்து மலேசியர்களுக்கும் விசா தொடர்பான தேவைகள் துரிதமாகச் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு எங்களுக்குத் முக்கியமானது,” என ஃபாஹ்மி கூறினார்.
இது குறித்து, ஈரானிலுள்ள மலேசியர்களின் தற்போதைய நிலைமையை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கியதாகவும் தெரியவந்தது.
மலேசிய அரசு, வெளிநாடுகளில் உள்ள நம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.





