கோலாலம்பூர், 16/06/2025 :மலேசிய பாரதி தமிழ் மன்றம், லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் கோமல் தியேட்டர் ஆகியவை இணைந்து வழங்கும் பிரமாண்ட மேடை நாடகம் “திரௌபதி (இதிகாச நாயகியின் கதை)” ஆகஸ்ட் 23, 2025 அன்று கோலாலம்பூரில் உள்ள சந்தானந்த் அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இந்த நாடகம் மகாபாரத இதிகாசத்தில் இடம்பெறும் திரௌபதியின் கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் கதையும் இயக்கமும் தருணி கோமல், இசை அமைப்பு ராஜ்குமார் பாரதி, நடனக் காட்சிகள் மற்றும் இயக்க உதவி சதீஷ்குமார் ஆகியோரால் நடத்தப்படுகிறது.
இந்த நாடகத்திற்கான ஊடக சந்திப்பு ஜூன் 16, 2025 அன்று MY FAME அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் நாடகத்தின் முக்கிய அம்சங்கள், கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் தயாரிப்பு சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
இந்த மேடை நாடகம் தமிழ் நாடக ரசிகர்களுக்கான ஒரு சிறந்த அனுபவமாக அமையவிருக்கிறது.
டிக்கெட் விலை
VIP – RM 300
RM 200
RM 100
RM 50
டிக்கெட் விற்பனை/ முன்பதிவு
Mr.Thiaga 012-7809390
Mr.P.Parthasarathee 016-3263002
Mr.KRP. Raman 016-9859505
Dr.Bala Tharmalingam 016-4411266
இந்நிகழ்வுக்கான டிக்கெட்களை Cloud Joy ஆன்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம்.





