என் தமிழ்

PERTAMA பினாங்கு மாநிலத்தின் ஏற்பாட்டில் பௌலிங் போட்டி

பிராய், 15/06/2025 : மலேசியா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை (PERTAMA) பினாங்கு மாநிலத்தின் ஏற்பாட்டில், பிராய் ஜாலான் பாருவில் உள்ள மெகாமால் பௌலிங் மையத்தில் நடைபெற்ற பௌலிங் போட்டியில் பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பினாங்கு கிளை தலைவர் திரு தனன்பாலன் நந்தகுமார் மற்றும் மகளிர் பிரிவு செயலாளர் திருமதி பானு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பினாங்கு மாநில மாமன்றத்தை சேர்ந்த திரு முனியாண்டி மற்றும் திரு பிரேம் குமார் ஆகியோரும் போட்டியில் ஈடுபட்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டி நிகழ்ச்சி, பல சமூக உறுப்பினர்களை ஒன்று சேர்த்ததோடு, ஒற்றுமை மற்றும் நட்புறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

Scroll to Top