சிப்பாங், 15/06/2025 : டத்தோ இந்தர் சிங், மக்கள் முற்போக்கு கட்சியின் (PPP) தலைமைச் செயலராக, செப்பாங்க் PPP பிரிவின் வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தை செங்காய் பெலகில் அமைந்துள்ள MCA அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி தலைமை ஏற்றார்.
இந்த நிகழ்வு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் கூடிய மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்தது. நிகழ்வின் போது, கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் டாக்டர் சுரேந்திரன் (PPP சிலாங்கூர் மாநில தலைவர் மற்றும் தாஜுதீன் முகிடீன் மாநில துணைத்தலைவர் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்கள் இருவரும் PPP கட்சியின் மாநில மட்டத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் Grassroots அளவில் கட்சி வலுப்படுத்தும் முயற்சிகளைப் பற்றி பகிர்ந்தனர்.
டத்தோ இந்தர் சிங் தனது உரையில், PPP கட்சியின் மாநில மற்றும் மாவட்டச செயல்பாடுகள் மேலும் தீவிரப்படவேண்டும் என்பதையும், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அரசியல் செயல்பாடுகளில் பங்கு பெற வேண்டும் என்ற தேவையை வலியுறுத்தினார்.
முடிவில், PPP செப்பாங்க் பிரிவின் ஒழுங்கமைப்பு, உறுதியான ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான தெளிவான திசைதிருப்பங்களை பாராட்டி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
PPP செப்பாங்க் பிரிவிற்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் முன்னேற்றம் மற்றும் சேவை!





