சிலாங்கூரை ஆட்சி செய்ய தானும் 4 பாஸ் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுமே போதும் – காலிட்

சிலாங்கூரை ஆட்சி செய்ய தானும் 4 பாஸ் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுமே போதும் - காலிட்

ABDUL_KHALID_IBRAHIM

தற்சமயம்  தானும் நான்கு பாஸ் சேர்ந்த நான்கு ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுமே சிலாங்கூர் மாநில அரசை செம்மையாக வழி நடத்திட போதும் என சிலாங்கூர் முதல் மந்திரி தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ காலிட் இப்ராஹிம் இன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலமா என செய்தியாளர்களின் கேள்விக்கு காலிட் பதில் அளிக்கையில் பக்காத்தான் ராயட் என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பு கிடையாது எனவும் அது DAP, PAS, PKR  ஆகியவற்றின் கூட்டு அமைப்பு அவ்வளவே எனவும் தெரிவித்தார்.

Umno அவருக்கு ஆதரளவு அளிக்கிறதா என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் ஆதரவு வரவேற்கத்தக்கதே என்றும் ஆனால் தற்சமயம் தானும் PAS கட்சியும், அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என திரு. காலிட் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று திரு. காலிட் PKR மற்றும் DAP சேர்ந்த சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.