ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில் ஜனவரி 09 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கு தமிழ் என்ற தமிழ் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி மலேசியாவில் 4 இடங்களிலும் சிங்கப்பூரிலும் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழாவும் முதல் நாள் நிகழ்ச்சியும் சிலாங்கூரில் உள்ள பத்துமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று 09/01/2015 நடைபெற்றது. பத்துமலையில் நடைபெற்ற நிகழ்வில் இன்று பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் பல்வேறு தமிழ் பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிகள் வழங்கப்பட்டன.
பொங்கல் வைத்தல், கரும்பு சாப்பிடுதல், உறி அடித்தல், தோரணம் கட்டுதல், மல்லிகை சரம் தொடுத்தல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளை தொடர்ந்து பல்வேறு கிராமிய மற்றும் பாரம்பரிய நடனங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பொங்கு தமிழ் நிகழ்ச்சி மேலும் நான்கு நாட்கள் கீழ்கண்ட ஊர்களில் நடைபெறுகிறது
தேதி 10/1/2015
இடம்:ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில், செராங்கூல் சலை, லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்
நேரம்:மதியம் 3மணி முதல்
தேதி 11/1/2015
இடம்:ஹாங் துஅஹ் ஸ்டேடியம், மலாக்கா
நேரம்:மதியம் 3மணி முதல்
தேதி 12/1/2015
இடம்:SJK (டி) செயின்ட் தெரசா கான்வென்ட், ஜாலான் நீண்ட ஜாபர், தைய்பிங்க்
நேரம்:மதியம் 3மணி முதல்
தேதி 13/1/2015
இடம்:பாலதண்டாயுதபாணி கோயில், அருவி சாலை ஜார்ஜ் டவுன், பினாங்கு
நேரம்:மதியம் 3மணி முதல்