எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களை அழிப்பதற்கு அமைச்சரவை 26.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
இத்தொகையானது, டெங்கி கொசு மருந்து அடிப்பதற்குத் தேவைப்படும் ஆள்பலத்தை அதிகரிக்கவும் தனியார் நிறுனவங்களின் உதவியை நாடவும் பயன்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.