மலேசியாவட்டாரச் செய்திகள்

உணவகத்தினுள் நுழைந்த வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

சித்தியவான், 09/05/2025 : நேற்றிரவு, பேராக், சித்தியவானில் உள்ள ஒரு துரித உணவகத்தினுள், SUV ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து நுழைந்ததில் ஏற்பட்ட விபத்தினால், 73 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

ஶ்ரீ மஞ்சோங், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, இரவு மணி 10.56 அளவில் அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், இவ்விபத்தில் நான்கு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் ஐந்து முதல் 38 வயதிற்குட்பட்ட ஒரு சிறுமி உட்பட எழுவர் காயமடைந்தனர்.

சிராய்ப்பு காயங்களுக்கு ஆளான அவர்கள், அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

29 வயதான ஆடவர் செலுத்திய, Volvo XC90 ரக வாகனம், கம்போங் கோ-இல் இருந்து சுங்கை வாங்கி-ஐ நோக்கி பயணித்தது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓர் உணவகத்தின் முன்புறம் உள்ள சமிக்ஞை விளக்கு பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், உணவகத்தையும் எட்டு வாடிக்கையாளர்களை மோதியதாக நம்பப்படுகிறது.

இவ்வழக்கு 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், செக்‌ஷன் 41உட்பிரிவு (1)-இன் கீழ் விசாரிக்கப்படும் நிலையில், வாகன ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

SUV ரக வாகனம் உணவகத்தின் மீது மோதிய காணொளி நேற்று சமூக ஊடங்களில் பகிரப்பட்டது.

நேற்று இரவு மணி 9.10 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட அந்த மூதாட்டியை பொது மக்கள் மீட்டதாக கூறப்படுகின்றது.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews