மலேசியாவட்டாரச் செய்திகள்

கொள்ளையடிப்பதற்கு போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த ஐவர் தேடப்படுகின்றனர்

காஜாங், 09/05/2025 : கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், செமினியில் உள்ள ஒரு வீட்டைக் கொள்ளையடிப்பதற்கு முன்பு, போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த ஐவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகாலை 5 மணி அளவில் சம்பவம் நிகழ்ந்த போது, பணி ஓய்வு பெற்ற 55 வயது ஆடவரும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் அந்த வீட்டில் இருந்ததாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

நான்கு சந்தேக நபர்கள் முகமூடி அணிந்திருப்பதையும், அவர்களில் இருவர் போலீஸ் உடை அணிந்திருப்பதையும், மறைக்காணியில் பதிவான காணொளி காட்டியுள்ளது.

மற்றொரு சந்தேக நபர் காரில் காத்திருந்ததையும் அக்காணொளியில் கண்டறியப்பட்டது.

வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து அந்த ஆடவர்கள் நகைகள், கைத்தொலைப்பேசி மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.

இதனால் 9 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395 மற்றும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 170-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 016-9140758 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews