என் தமிழ்

5A க்களுக்கு மேல் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் 

கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-களுக்கு மேல் மதிப்பெண் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மாராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

பகிரப்பட்ட ஒரு காணொளி மூலம் மொத்தம் 1,932 பூர்வக்குடி மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியதாகவும்  அதில் 87 மாணவர்கள் 5ஏக்களுக்கும் மேல் பெற்றதாக தமது முகநூல் பதிவில் பகிரப்பட்ட ஒரு காணொளி மூலம் சாஹிட் ஹமிடி கூறினார்.

மாரா உயர்க்கல்வி கழகங்களில் தங்களின் மேற்படிப்பைத் தொடர இந்த உபகாரச் சம்பளம் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Source : Bernama

#SPMResults
#MARA
#AhmadZahidHamidi
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top