கோலா திரெங்கானு, 2/04/2025 : நேற்றிரவு, கோலா திரெங்கானு, பெங்காலான் அராங்கில் உள்ள சுராவிலிருந்து வீடு திரும்பிய முதியவர் ஒருவர், வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றிரவு மணி 9.35 அளவில் நிகழ்ந்த அச்சாலை விபத்தில் Honda Waze ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 77 வயதுடைய அலி முஹமாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், Ford Ranger ரக வாகனமொட்டி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
மோட்டார் சைக்கிளோட்டி சாலையின் ஓரத்திலிருந்து சாலையில் நுழைந்து போது விபத்துக்குள்ளானது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹமட் நோர் கூறினார்.
விபத்தில் பலியான முதியவரின் உடல், மேல் நடவடிக்கைக்காக, சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு 1-இன் கீழ் விசாரணை மேற்கொள்ள, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews





