மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆயர் கூனிங் பிரச்சாரம்; இதுவரை 7 போலீஸ் புகார்கள்

பீடோர், 22/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் காலக்கட்டத்தில் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் இதுவரை ஏழு புகார்களைப் பெற்றுள்ளது.

அவற்றில் ஐந்து புகார்கள் குற்றம் நிகழ்ந்ததற்கான எந்த ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு, மேலும் இரு புகார்கள் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 427-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

“இரு புகார்களும் சேதம் ஏற்படுத்தியதை தொடர்புப்படுத்தியுள்ளது. சுவரொட்டிகளைச் சேதப்படுத்தியது மற்றும் கட்சிக் கொடிகளை அகற்றியது ஆகியவையாகும். அதனை நாங்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 427 இன் கீழ் விசாரித்து வருகிறோம்,” என்று பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்த சம்பவம், தாப்பாப் ரோட் பகுதியைச் சுற்றி நிகழ்ந்ததால், இரு புகார்களும் தாப்பா ரோட் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாக டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் விளக்கினார்.

மேலும், எஞ்சிய பிரச்சாரக் காலம் முழுவதும் 3R எனப்படும் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பிலான கருத்துகளை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

Source : Bernama

#AyerKuningByElections
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews