சிரம்பான், 18/04/2025 : பேரங்காடி ஒன்றில் ஆடவர் ஒருவரை பாராங் கத்தியைக் கொண்டு தாக்கியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தனியார் நிறுவன தள நிர்வாகி ஒருவர், இன்று, சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி டத்தின் சுரித்தா புடின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.சுரேஷ் கண்ணா அவ்வாறு கூறினார்.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, இரவு மணி எட்டு அளவில் சிரம்பானில் உள்ள பேரங்காடி ஒன்றில் B Nagarajah எனும் ஆடவரை வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கியதாக Suresh மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 326-இன் கீழ், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
15,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் சுரேஷ் கண்ணாவை நீதிமன்றம் விடுவித்தது.
அதோடு, கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் மே 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews