மியன்மாரில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஏ.டி.எம் மருத்துவக் குழு திரும்பப் பெறப்படும்

மியன்மாரில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஏ.டி.எம் மருத்துவக் குழு திரும்பப் பெறப்படும்

தாப்பா, 18/04/2025 : மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம் மருத்துவக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களை திரும்பப் பெற மலேசியா தயாராக உள்ளது.

அனுப்பப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளப்படாது என்றும் அந்த உறுதியான நிலைப்பாடு குறித்து மியன்மார் வெளியுறவு அமைச்சர் யூ தான் ஸ்வேக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

“கைவிடுங்கள் என்று மியன்மார் தரப்பை நானே கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், பேரிடர் நேரத்திலும் சண்டையிட உள்ளனர். எங்களது மருத்துவக் குழுவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டால், பின்வாங்கத் தயங்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹமாட் யுஸ்ரி பாகிருடன் பிரச்சாரத்தில் களமிறங்கிய போது அதன் துணைத் தலைவருமான முஹமட் ஹசான் அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி மியன்மாரை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதநேய உதவிகளை மேற்கொள்ள ஏ.டி.எம்-இன் மருத்துவக் குழு இன்று அதிகாலை அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Source : Bernama

#Myanmar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews