பேங்காக், 18/04/2025 : மியன்மார் மாநில நிர்வாக மன்றத் தலைவர் மூத்த ஜெனரல் மின் ஆங் லைங்கும் (Min Aung Hlaing) மியன்மார் தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்.யு.ஜி பிரதமர், மன் வின் கைங்-உம் (Mahn Win Khaing Than) அந்நாட்டில் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதியளித்துள்ளனர்.
தாய்லாந்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது, இரு தரப்பினருடனும் தனித்தனியாக மேற்கொண்ட கலந்துரையாடல்களின்போது, அத்தலைவர்கள் அந்த உறுதிமொழியை வழங்கியதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அச்சந்திப்பின்போது, அவ்விரு தலைவர்களும் தமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடுவோரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்ததாகப் பிரதமர் எடுத்துரைத்தார்.
தனது இரண்டு நாள் அலுவல் பயணத்தின் முடிவில், வட்டார ஒருங்கிணைப்பை அதிகரிக்க சக ஆசியான் தலைவர்களிடம் உடனடியாகத் தெரிவிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கவும், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கூடுதல் பணியாளர்களை நிவாரணப் பணிகளில் பங்கேற்கச் செய்யவும் சக ஆசியான் தலைவர்களிடம் உடனடியாகத் தெரிவிப்பதாகப் பிரதமர் கூறினார்.
அதோடு, உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகமான பணியாளர்கள் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்கவும் உதவுவதாக அன்வார் தெரிவித்தார்.
Source : Bernama
#Myanmar
#PmAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews