33 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

33 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர், 11/04/2025 : கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று ஆடவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 33 லட்சத்து 30,000 ரிங்கிட் மதிப்புடைய 104 கிலோகிராம் ஷாபு வகைப் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அப்போதை பொருள் சரவாக்கிற்கு கடத்தவிருந்த கும்பலின் நடவடிக்கையை கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் முறியடித்தது.

கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, இரவு மணி 11.40-க்கு கூச்சாய் லாமாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் இரு அறைகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் வழி, 33-இல் இருந்து 44 வயதிற்குட்பட்ட உள்நாட்டவரான அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.

ஐந்து லட்சத்து 20,000 போதைப் பித்தர்களின் தேவையை அந்த 104 கிலோகிராம் ஷாபு வகை போதைப் பொருள் பூர்த்தி செய்யக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Source : Bernama

#CrimeNews
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews