தம்புனானில் நேற்று மாலை திடீரென ஆலன்கட்டி மழைப் பெய்ததால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மாலை 3.30 மணிக்கு திடீரென ஆலங்கட்டி மழை பெய்த போது பலர் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் புல்வெளியில் விழுந்த ஆலங்கட்டி மழையை ஆச்சர்யத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பலத்த ஓசையுடன் கூரைகளிலும் புல்வெளியிலும் விழுந்த ஆலங்கட்டி மழை சில நிமிடங்கள் வரை நீடித்தது.
சபாவில், இதுபோன்று ஆலங்கட்டி மழை பெய்வது இது முதல்முறையல்ல என்றும் கடந்த 1980, மற்றும் 1992-ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.