ஒவ்வொரு விவகாரங்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தும் தரப்பினருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது

ஒவ்வொரு விவகாரங்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தும் தரப்பினருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது

புத்ராஜெயா, 07/04/2025 : இந்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விவகாரங்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தும் பொறுப்பற்ற தரப்பினருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்காக சில தரப்பினரால் பெரிதாக்கப்படும் சிறிய பிரச்சனைகளை, உண்மையில் சுமூகமாக தீர்க்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

“எனவே நாம் சுமூகமாக கையாளக்கூடிய சிறிய விஷயங்கள் பெரிதாக்கப்படுகின்றன. போர் நடக்கும், கோவில் தொடர்பான போர், பலூன் தொடர்பான போர். நம்மால் அவ்விவகாரத்தை நன்றாகக் கையாள முடியும். ஆகவே, அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஏனென்றால், சிலர் அறியாமையால் பொது நலனைப் பற்றி சிந்திப்பதில்லை. எல்லாம் அரசியலாக்கப்பட வேண்டும். அனைத்தும் தண்டிப்பதன் மூலம் செய்யப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் இப்பிரச்சனைகள், மக்களை மிகவும் தாழ்த்தி, சமூகத்தைப் பிளவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அதனை உறுதியாக கையாள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews