வரி; மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்

வரி; மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்

புத்ராஜெயா, 07/04/2025 : அமெரிக்கா அறிவித்திருக்கும் வரி விதிப்பு விவகாரம் தொடர்பில், மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருப்பதை அது உறுதிச் செய்யும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்-பின் வரி அறிவிப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலில் ஆசியான் நாடுகள் இதனை எளிதாக கருதிவிட முடியாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.

“ஒரு நாடாக, நம்மில் ஒரு பகுதியினர் சற்று கடுமையான முடிவுகளை எடுப்பது உண்மைதான். ஆனால், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணம் என்னவென்றால், என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை முதலில் தீர்மானிப்பதாகும். இந்தக் கூற்று பொதுவானது என்ற நிலையில், விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் உள்ளது. இரண்டிற்கும் சில விதிவிலக்குகள் உள்ளன. அவற்றை நாம் முதலில் உறுதிப்படுத்த விரும்புகிறோம். எனவே, எளிதான வழியைப் பின்பற்றலாம்”, என்று அவர் கூறினார்.

விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு இன்னும் இருப்பதால், அரசாங்கம் முதலில் மிதமான அணுகுமுறையைக் கையாளவும் அடையாளம் காண வேண்டிய சில விதிவிலக்குகளும் இருப்பதாகவும் அன்வார் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Source : Bernama

#USAImportTax
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews