புத்ரா ஹைட்ஸ் – 25 வீடுகளுக்குக் குடியிருப்பாளர்கள் மீண்டும் செல்ல அனுமதி

புத்ரா ஹைட்ஸ் - 25 வீடுகளுக்குக் குடியிருப்பாளர்கள் மீண்டும் செல்ல அனுமதி

சுபாங் ஜெயா, 06/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கம்போங் கோலா சுங்கை பாருவில், 25 வீடுகளில் மேற்கொண்ட இறுதி பாதுகாப்பு மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்து அதன் குடியிருப்பாளர்கள் இன்று வீடு திரும்ப அனுமதிக்கட்டுள்ளனர்.

கட்டிட அமைப்பு மற்றும் மின் கம்பி தர பரிசோதனை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகளுடன் குடும்பத் தலைவர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டதாக, கோலா சுங்கை பாருவின் கிராமத் தலைவர் ஃபிக்ரி ஜூஸ்டீன் கூறினார்.

“இப்போது பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் செல்ல முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுது குடும்ப தலைவர்கள் மட்டுமே தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஜேகேஆர் மற்றும் தி.என்.பி போன்ற அதிகாரிகளுடன் அழைத்து சென்று பரிசோதனை செய்து வருகிறோம். அவர்கள் வீட்டில் தங்குவதற்குப் பாதுக்காப்பானது என்பது குறித்து மறுபரிசோதனை செய்துக் கொள்ள அழைத்து செல்லப்படுகின்றனர். பாதுகாப்பு என்று உறுதிப்படுத்தியதும் அவர்கள் பிபிஎஸ்-சிலிருந்து தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல முடியும்”, என்று அவர் கூறினார்.

இன்று, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபிக்ரி ஜூஸ்டீன் அவ்வாறு கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவது முற்றிலும் பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்திய பின்னரே, அவர்களைத் திரும்பி அனுபவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஃபிக்ரி வலியுறுத்தினார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews