மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்பதால் நிவாரண உதவிகள் தொடரும்

மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்பதால் நிவாரண உதவிகள் தொடரும்

நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியா கணித்திருப்பதால், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிவாரண பணிகள் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடரப்படவுள்ளது.

கடந்த மார்ச் 28ஆம் தேதி மியன்மாரை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்குழு எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏப்ரல் 22 வரை மூன்று வார போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

மலேசியாவும் ஆசியானும் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்பதாக வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார்.

மியன்மார் மக்களின் சுபிட்சம் மற்றும் நல்வாழ்வுக்காக, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவின் அளவையும், நீண்டகால மனிதாபிமான உதவிகளின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, இது தொடரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த அறிவிப்பால் நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில் இந்த நெருக்கடியான நிலையில் நாடு பேரழிவை எதிர்கொள்கிறது. எனவே தொடர்ந்து அங்கு சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம். மியன்மார் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் உதவி பெறுவது என்பதே இப்போது மிக முக்கியமான விஷயமாகும்”, என்று அவர் கூறினார்.

Source : Bernama

#Myanmar
#MyanmarEarthquake
#SMART
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews