நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு அங்கு சென்றிருந்த ஸ்மார்ட் எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழு நாளை நாடு திரும்புவர்.
ஸ்மார்ட் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை காலம் முடிவடைந்தது மட்டுமின்றி அந்நாட்டின் இயற்கை பேரிடரின் இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களை இனியும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அது நிறுத்தப்படுவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
“மலேசியாவிலிருந்து சென்றிருந்த ஸ்மார்ட் படையினர் ஐந்து நாட்களாக கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை உயிருடன் கண்டுபிடித்து மீட்டனர். மற்ற அனைவரும் இறந்துவிட்டனர்”, என்று அவர் கூறினார்.
நேற்று மியன்மாருக்கு மனிதாபிமான பணியின் நிமித்தமான தமது அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் பெர்னாமாவிடம் அவ்வாறு கூறினார்.
அந்த ஒருநாள் மனிதாபிமான கொள்கைப் பணிக்குத் தமது நண்பரும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சருமான மாரிஸ் சங்கியம்போங்சா தலைமைத் தாங்கியதாகவும் முஹமட் ஹசான் தெரிவித்தார்.
Source : Bernama
#Myanmar
#MyanmarEarthquake
#SMART
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews