கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், 05/04/2025 : தங்களது சொந்த ஊர்களில் நோன்புப் பெருநாளை கொண்டாடிய மக்கள் கோலாலம்பூரை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, வாகனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால், காராக் தொடங்கி லெந்தாங் வரை 20 கிலோ மீட்டர் தொலைவிற்கும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம், LLM-இன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாளை கொண்டாடிய மக்கள் வேலைக்குச் செல்லவிருப்பதால் கோலாலம்பூரை நோக்கி புறப்பட தொடங்கிவிட்டனர்.

கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் E1 மற்றும் E2 சாலைகளான வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews