புத்ரா ஹைட்ஸ், 05/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அதோடு, தற்காலிக நிவாரண மையமாக செயல்படும் சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ் பள்ளி வாசல் மண்டபத்திற்கு வருகைப் புரிந்த அவர், அங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த மாமன்னர், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளை மூலம் தமது தனிப்பட்ட நன்கொடையை வழங்கினார்.
குடும்பத் தலைவர்கள் 308 பேர், மாமன்னர் வழங்கிய ஆயிரம் ரிங்கிட் தொகையை பெற்றுக் கொண்டனர்.
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாரப்புடின் இட்ரிஸ் ஷா , சிலாங்கூர் மந்திரி புசார், டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளரான டத்தோ ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோரும் மன்னரோடு அங்கு வருகை புரிந்திருந்தனர்.
முன்னதாக, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் அவர் சம்பவம் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை மணி 8.10 அளவில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
சுமார் 8 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர், தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் மொத்தம் 87 வீடுகள் மிக முற்றிலுமாக சேதமடைந்த வேளையில், மேலும் 148 வீடுகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இதில், உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Agong
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews