பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க LPHS இணக்கம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க LPHS இணக்கம்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் LPHS இணக்கம் தெரிவித்துள்ளது.

அதில் ஒரு பகுதி வீடுகள் சிப்பாங் கோத்தா வாரிசானிலும் எஞ்சியவை, SMART Sewa Selangor திட்டத்தின் கீழ் பின்னர் அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“ஒரு வாரத்திற்குள் எல்லாம் சரியாக நடைபெற்றால், இரண்டு வாரங்களில் அவர்கள் இந்த ஸ்மார்ட் வாடகை வீட்டிலும், Airbnb குடியிருப்புகளிலும் தங்க வைக்கப்படலாம். அதற்கான இடம் பின்னர் தீர்மானிக்கப்படும். ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர், இவை அனைத்தும் அறிவிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், செயற்குழுக் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிப்போம்,”என்றார் அவர்.

இன்று முதல், பாதிக்கப்பட்ட அதிகமானோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமிருடின் தெரிவித்தார்.

மீதமுள்ள 115 வீடுகள் மீண்டும் குடியேறுவதற்கு பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டதும் பயன்பாட்டு சேவை மீண்டும் இணைக்கப்பட்ட பின்னர் இரண்டாவது குழு வீடு திருப்புவதற்கு அனுமதிக்கப்படும்.

Source : Bernama
Photo : Anwar Ibrahim FB

#LPHS
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews