புத்ரா ஹைட்ஸ், 01/04/2025 : இன்று காலை மணி 8.10-க்கு பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் அருகில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, Petronas Gas நிறுவனத்தின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டிருந்ததை Petroliam Nasional Berhad, பெட்ரோனாஸ் உறுதி செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த எரிவாயு குழாய் மூடப்பட்டுள்ளதாகவும் அனைத்து முக்கிய தரப்பினருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெட்ரோனாஸ் அகப்பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புத்ரா ஹைட்ஸ், டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 2 மற்றும் புத்ரா பெஸ்தாரி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று அருகிலுள்ள பெட்ரோனாஸ் எரிவாயு நிலையங்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் பாதுகாப்பு அம்சம் கருதி, அந்த எரிவாயு நிலையங்களின் பல்பொருள் கடைகள் மூடப்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கையாள தற்போது அமலாக்கத் தரப்பினருக்கு பெட்ரோனாஸ் அணுக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
சுற்றுப் பகுதியில் உள்ளவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நாட்டிற்கான எரிவாயு விநியோகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பெட்ரோனாஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.
Source : Bernama
#Petronas
#GasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews