ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை

ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை

ஈப்போ, 31/03/2025 : பேராக் ஈப்போவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அவ்வட்டாரத்தில் வசிக்கும் நூற்றுக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இன்று, ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் வெளிநாட்டினர் உட்பட அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டதாக ஈப்போ  இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் இமாம் மௌலவி அல்-ஆஃபி முகமது அபாஸ் தெரிவித்தார்.

“ஒரு பெரிய மாநாட்டைப் போன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அனைவரும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டார்கள். தொழுகைக்குப் பிறகு குத்பா ஓதப்பட்டது,” என்று முகமது அபாஸ் கூறினார்.

தொழுகை முடிந்த பின்னர், ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அடுத்து வரும் ஷவால் மாதத்தின் முதல் தேதியில் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாள் கொண்டாடுவர்.

ரமலான் மாதத்தில், ஏழைகளுக்கு உதவுவது ஊக்குவிக்கப்படும் நிலையில், அது தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Source : Bernama

#Ramadan
#Perak
#Ipoh
#IndianMuslims
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews