மும்பை வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மும்பை வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Ebola-story

நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1200 பேர் வரை பலியாகியுள்ளனர்.

அந்நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மூலமாக எபோலா வைரஸ் காய்ச்சல் இங்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன் பின் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை உஷார்படுத்தப்பட்டன. இந்நிலையில் நைஜீரியாவிலுள்ள லாகோஸ் நகரிலிருந்து சமீபத்தில் மும்பை வந்த மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள வசை பகுதியை சேர்ந்த லலித் குமார் என்பவர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.

அவருக்கு எபோலா நோய் இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி சுரேஷ் ஷெட்டி தெரிவித்தார்.

அவரது உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு சோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.