பேச்சுவார்த்தைகளும் இணக்கமான தீர்வுகளும் இஸ்லாத்தை பலவீனமாக காட்டாது

பேச்சுவார்த்தைகளும் இணக்கமான தீர்வுகளும் இஸ்லாத்தை பலவீனமாக காட்டாது

கோலாலம்பூர், 27/03/2025 : பேச்சுவார்த்தைகளும் சுமுகமான தீர்வுகளும் இஸ்லாத்தை பலவீனமான மதமாகக் காட்டாது.

மாறாக, பல மதங்கள் மற்றும் இனங்களைக் கொண்ட சமூகத்தின் மீதான மரியாதை, கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் உணர்வை அது பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்

மடானி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட மதிப்புகளில் ஒன்றாகவும் இது உள்ளதாக அவர் விளக்கினார்.

“தகுந்த முறையைப் பயன்படுத்தி நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடத்துங்கள். சிறந்த முறையிலான தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் தகுந்த பேச்சுவார்த்தை பலவீனத்தின் அடையாளமல்ல. மாறாக, அமைதியான, நாகரீகமான மற்றும் தார்மீகமான தீர்வே இதற்கான சிறந்த வழியாகக் கருதப்படுகிறது,” என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நடைபெற்ற மடானி பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

லோட் 328, ஜாலான் முன்ஷி அப்துல்லா, கோலாலம்பூர் என்ற முகவரியில் உள்ள ஜேக்கலின் நிலத்தில் உருவாக்கப்படும் மடானி பள்ளிவாசல், இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12,142 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்நிலத்தில் அமைக்கப்படும் இப்பள்ளிவாசலில், முதல் தளத்தில் அமைந்துள்ள பிரதான தொழுகைக் கூடத்தில் 592 யாத்ரீகர்கள் உட்பட ஒரேநேரத்தில் ஏறக்குறைய 2,900 பேர் தொழும் வகையில் உருவாக்கப்படுவதோடு அலுவலகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகளுடன் கூடுதலாக ஒரு மண்டபமும் அமைக்கப்படும்.

மேலும், இம்மசூதி, இஸ்லாமியர்களை மட்டுமின்றி, கோலாலம்பூரைச் சுற்றியுள்ள இதர மக்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் சமூகத்தின் நல்வாழ்விற்கு வழியாகவும் அமையும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Source : Bernama

#MasjidMadani
#PmAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews