ஷா ஆலம், 23/03/2025 : சிலாங்கூர், கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடி ஒன்றில், நேற்றிரவு 10.15 மணிக்கு ஆயுதங்களை ஏந்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிலாங்கூர் போலீஸ் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகிய தரப்புகளால், அந்த ஆடவர் புக்கிட் பெருந்தோங் பகுதியில் கைது செய்யப்பட்டதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
கொள்ளையடிக்கப்பட்ட பல நகைகள் அச்சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டிருக்கிறார்.
1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டம், செக்ஷன் 4-இன் கீழ் தொடர் விசாரணையை மேற்கொள்ள, அந்நபருடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாக, அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவம் குறித்து, நேற்று மாலை 4.56 மணிக்கு, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு, முன்னதாக பொதுமக்கள் ஒருவரின் மூலம் அழைப்பு கிடைத்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்தின் போது, அச்சந்தேக நபர் துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இச்சம்பவத்தினால் 20 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Source : Bernama
#ShahAlam
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews