கேமரன் மலை, 22/03/2025 : நாட்டை தொழில்நுட்ப வளர்ச்சியில் கொண்டு செல்லும் இலக்கில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
ஆகவே, இவ்வாண்டு இறுதிக்குள் நாடு தழுவிய அளவில் குறைந்தது எட்டு லட்சம் பேர் செயற்கை நுண்ணறிவு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு அரம் ஏ.ஐ திட்டம் துணைப் புரியும் என்று ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
மாணவர்களிடையே, செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரம் ஏ.ஐ திட்டம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.
அதில் முதல்கட்டமாக, பகாங், கேமரன் மலையில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்று அது தொடர்பான விளக்கமளிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து இதில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தத் தொடக்கம் இங்குள்ள மாணவர்களிடையே பெரிய உருமாற்றத்திற்கு வித்திடும் என்று சரஸ்வதி நம்பிக்கை தெரிவித்தார்.
Source : Bernama
#Cameroon
#Pahang
#AITraining
#SJKTs
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews