3R குறித்து பதிவேற்றம் செய்த ஆடவர் மீது எம்சிஎம்சி விசாரணை

3R குறித்து பதிவேற்றம் செய்த ஆடவர் மீது எம்சிஎம்சி விசாரணை

கோலாலம்பூர், 13/03/2025 : 47 வயதான உள்நாட்டு ஆடவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மத உணர்வைத் தூண்டும் 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான போலி உள்ளடக்கத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆயர் கூனிங் பள்ளிவாசலில் ஒலிபெருக்கியின் வாசிக்கப்பட்ட தொழுகை, அச்சமயத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று, இம்மாதம் 9-ஆம் தேதி, தமது முகநூல் பக்கத்தில் அந்த உள்ளடக்கம் பதிவேற்றம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.

நேற்று, பேராக், தைப்பிங்கில் உள்ள போலீஸ் நிலையத்தில் அச்சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணையும் நடத்தப்பட்டது.

தடயவியல் பரிசோதனை நடவடிக்கைக்காக, அந்நபரின் கைத்தொலைப்பேசியையும், சிம் அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டம் 588 அல்லது 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், செக்‌ஷன் 255-இன் கீழ் வாக்குமூலப் பதிவு மற்றும் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட ஆடவருக்கு, முன்னதாக எம்சிஎம்சி அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதே சட்டம், செக்‌ஷன் 233 உட்பிரிவு (1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 லட்சம் வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Source : Bernama

#MCMC
#3R
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.