புத்ராஜெயா, 13/03/2025 : SAPURA ENERGY நிறுவனம், எஸ்.ஈ.பி-க்கு அரசாங்கம் செலுத்தும் 110 கோடி ரிங்கிட் நிதி, அந்நிறுவனத்தைப் பாதுகாக்கும் மீட்பு நிதி என்று அர்த்தமாகாது.
மாறாக, அது திரும்பப் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
எஸ்.ஈ.பி-இன் புதிய நிர்வாகம், மிகவும் திறமையான செயல்பாடுகளை மேற்கொண்டு, கடனைத் திருப்பச் செலுத்த லாபத்தை ஈட்ட அந்த நிதி உதவி, கடன் மூலதனமாக ஆதரவளிக்கும் என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
“இது என்ன மீட்பு நிதியா? எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிதி, கடன் மூலதனமாக பயன்படுத்தப்படும். இதனால் புதிய நிர்வாகம் சிறப்பாக நிர்வகிக்கப்படும். லாபம் ஈட்டவும் கடனைத் திரும்பச் செலுத்தவும் உதவும். இந்த 100 கோடி ரிங்கிட் நிதியுதவி அல்ல; மாறாக அது கடனுதவியாகும்”, என்று அவர் கூறினார்.
பெரிய நிறுவனத்தை மீட்கும் முடிவு எளிதானதல்ல என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், எஸ்.ஈ.பி-யை நம்பியிருக்கும் 2,000க்கும் மேற்பட்ட உள்ளூர் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைக் காப்பாற்றுவதே, தமது முதன்மை நோக்கம் என்றும் தெளிவுப்படுத்தினார்.
எஸ்.ஈ.பி நிறுவனம் மூடப்படும் பட்சத்தில் எந்தவோர் உள்ளூர் நிறுவனமும் கீழ்நிலை செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்பதோடு, அத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற நிதி அமைச்சின் ஊழியர்களுடனான சந்திப்பில் பிரதமர் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
Source : Bernama
#SapuraEnergy
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.