கிள்ளான், காப்பாரில் சிலாங்கூர் கேபிடிஎன் அதிரடி சோதனை

கிள்ளான், காப்பாரில் சிலாங்கூர் கேபிடிஎன் அதிரடி சோதனை

கிள்ளான், காப்பார், 12/03/2025 :  கிள்ளான், காப்பார், ரந்தாவ் பஞ்சாங்கில் சிலாங்கூர் மாநில உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு கேபிடிஎன் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

சுமார் இரண்டு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான உதவித் தொகை பெற்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களான திரவ பெட்ரோலிய எரிவாயு LPG, ஒரு கிலோகிராம் சமையல் எண்ணெய் பாக்கெட் சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில கேபிடிஎன் இயக்குநர் முஹமட் சுஹாய்ரி மாட் ராடே தெரிவித்தார்.

ஒரு மாத காலமாக பெறப்பட்ட தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் சிலாங்கூர் போலீசாரின் ஒத்துழைப்புடன் இச்சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அவ்வளாகத்தில் வேலை செய்பவர்கள் என்று நம்பப்படும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட ஐந்து உள்நாட்டவர்களையும் 10 இந்தோனேசிய ஆடவர்களையும் தமது தரப்பு கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பாக்கெட் எண்ணெய் நிரம்பிய பெட்டிகளையும் வெட்டப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளையும் கண்டுபிடித்தனர்,” என்றார் அவர்.

மேலும், இச்சோதனை நடவடிக்கையில், 18,000 ரிங்கிட் மதிப்புடைய 6,910 டன் சமையல் எண்ணெய், 35,000 ரிங்கிட் மதிப்புடைய 2,606 டன் LPG மற்றும் பல்வேறு உபகரணங்களையும் நான்கு லாரிகளையும் அமலாக்கத் தரப்பினர் பறிமுதல் செய்தனர்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.