போலி பிறப்புப் பத்திரத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது

போலி பிறப்புப் பத்திரத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது

கோலாலம்பூர், 12/03/2025 : குடியுரிமையற்ற பிறப்புப் பத்திரங்களைத் தாமதமாக பதிவு செய்து குடியுரிமை வழங்குவது மற்றும் போலி துணை ஆவணங்களைப் பயன்படுத்தி பிறப்புப் பதிவு செய்வது தொடர்பான ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 16 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் கைது செய்தது.

நேற்று காலை மணி 11 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூரைச் சுற்றியுள்ள சிகிச்சையகங்களிலும் சட்ட நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட Op Outlander மற்றும் Op Birth சோதனை நடவடிக்கைகளின் மூலம் 20 முதல் 70 வயதுக்குட்பட்ட அச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் செயல்பாட்டு பிரிவின் துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் குசைரி யாஹயா கூறினார்.

Op Outlander சோதனை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அரசாங்க ஊழியர் என்று நம்பப்படும் முக்கிய சந்தேக நபர் 60 நாட்களைக் கடந்து தாமதமாக பிறப்பு பத்திரத்தை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிறப்புப் பத்திரத்தை தயார் செய்வதற்கான போலி ஆவணங்களை வெளியிடும், சிகிச்சையகங்கள் மற்றும் மகப்பேறு மையங்களை வைத்திருக்கும் டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட மருத்துவப் பயிற்சியாளர் ஒருவரும், இச்செயலில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் மூன்று முக்கிய சந்தேக நபர்கள் முகவர்களாக செயல்பட்டதுடன், அரசாங்கம் ஊழியர் ஒருவருக்கு ஏறக்குறைய 18,000 ரிங்கிட் கையூட்டுத் தொகை வழங்கியது, Op Birth சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட அனைவரும் விசாரணைக்காக எஸ்பிஆர்எம் தலைமையகம் மற்றும் சிலார்கூர் மாநில  எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதோடு, தடுப்பு காவல் உத்தரவை விண்ணப்பிக்க அனைவரும் இன்று சிலாங்கூர், ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 17 உட்பிரிவு (a) மற்றும் (b)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.