மின்னியல் உபரிப்பாகத் துறை; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த மலேசியா முயற்சி

மின்னியல் உபரிப்பாகத் துறை; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த மலேசியா முயற்சி

கோலாலம்பூர், 12/03/2025 : இவ்வாண்டு ஆசியானுக்கு தலைமைத்துவப் பொறுப்பு ஏற்றதற்கு இணங்க ஆசியான் உறுப்பு நாடுகளுடன் மின்னியல் உபரிப்பாகத் துறையில் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்த மலேசியா முயன்று வருகிறது.

இருப்பினும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் முயற்சிகளில் குறிப்பாக இவ்வட்டாரத்தில் மின்னியல் உபரிப்பாகத் துறையில் அண்டை நாடுகளுடனோ அல்லது பிற ஆசியான் உறுப்பு நாடுகளுடனோ போட்டியிட மலேசியா விரும்பவில்லை என்றும் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் தொங் தெரிவித்தார்.

“மலேசியா வியட்நாமுடன் போட்டியிடுவதாகவும், அண்டை நாடுகளுடன் போட்டியிடுவதாகவும் பலர் கூறுகிறார்கள். ஆனால் ஆசியானின் உணர்வு என்னவென்றால், நாம் நமது அண்டை நாடுகளையோ அல்லது ஆசியானில் உள்ள நமது நண்பர்களையோ போட்டியாளர்களாகக் கருதுவதில்லை. மின்னியல் உபரிப்பாகத் துறையைப் போல விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

இன்று, மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது செனட்டர் கேசவதாஸ் அச்சுதன் நாயர் எழுப்பிய கேள்விக்கு லியூ அவ்வாறு பதிலளித்தார்.

அனைத்துலக மின்னியல் உபரிப்பாகத் துறையில் மலேசியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் ஆசியான் நாடுகள் என்பதால் சவால்களை எதிர்கொள்வதில் அவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.