மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் தொகுதிகள் கணக்கின்றி தொடரப்படும்

மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் தொகுதிகள் கணக்கின்றி தொடரப்படும்

புத்ராஜெயா, 11/03/2025 : மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது இல்லையென்றாலோ, தொகுதிகள் கணக்கின்றி எதுவாக இருந்தாலும் தொடரப்படும்.

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீவிர வறுமையை ஒழிப்பதற்கான விரிவான முயற்சிகளும் அத்திட்டத்தில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“ஒதுக்கீடு தொடர்பாக, நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது இல்லையென்றாலோ மக்களுக்கான திட்டம் தொடரும். உதாரணமாக, தீவிர வறுமை ஒழிப்பு என்பது எந்த பகுதிகள் என்பதை பொருட்படுத்தாமல் செயல்படுத்தப்படும். சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் பள்ளி கழிப்பறையைப் புதுப்பித்தோம். எந்த பள்ளி என்று நாங்கள் கேட்கவில்லை”, என்று கூறினார்.

அரசாங்க ஒதுக்கீடுகளைப் பெறாததால், நிதிச் சுமைகளை அனுபவிப்பதாக கூறும் சில எதிர்காட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை தெளிவுப்படுத்தினார்.

மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்ற எண்ணத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதையும், பிரதமர் வலியுறுத்தினார்.

புத்ராஜெயாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த ரமலான் மாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.